November 17, 2025
குறைக்கப்படுமா? எரிபொருள் விலை!!!
Top புதிய செய்திகள்

குறைக்கப்படுமா? எரிபொருள் விலை!!!

Jun 17, 2024

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சானது எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பது கடினமான விடயம் என தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வர்த்தகக் குறியீட்டின்படி சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதால் அங்கு தீர்மானிக்கப்படும் விலைகளுக்கு அமைய இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டுமெனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் மசகு எண்ணெய் விலை 27 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த செப்டம்பரில் ப்ரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 94 அமெரிக்க டொலராக காணப்பட்டதுடன், தற்போது 74 டொலராக குறைவடைந்துள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *