Tamil News Channel

சபாநாயகருக்கு எதிரான விவாதம் ஆரம்பம்..!  

N 3.2

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று(19)  ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை புறக்கணித்து, ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற சபாநாயகர் இடமளித்ததாக குற்றஞ்சாட்டி சபாநாயகருக்கு  எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 44 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட அவநம்பிக்கை பிரேரணை அண்மையில் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிரேரணையை இரண்டு நாட்கள் விவாதிப்பதற்கு அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றும் நாளையும் இதற்கான விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், நாளையதினம்(20)  பிற்பகல் 4.30 மணியள்ளவில்  சபாநாயகருக்கு எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts