நடைபெற்றுவரும் இருபதுக்கிருபது உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சுப்பர் 8 இன் ஆறாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 19.5 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 10.5 ஓவர்களில் 1 விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றியிழக்கை அடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கட்டுக்களை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் வீரர் ரொச்டன் சேஸ் (Phil Salt) தெரிவாகியிருந்தார்.

இன்றிரவு நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here