இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்த நிலையில் இன்றையதினம்(01) தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்துள்ளது.
அதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 709,903 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் 1கிராம் தங்கம் 25,050 ரூபாவாகவும் அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,350 ரூபாவாகவும்22 கரட் 1கிராம் தங்கம் 22,970 ரூபாவாகவும் 22 கரட் 8கிராம் தங்கப் பவுண் 183,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.