கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை 1972-ம் ஜூன் 10-ம் திகதி மதுரையில் பிறந்துள்ளார். சுந்தர்பிச்சை இவ் வருடம் தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் பயணத்தின் உந்து சக்தியாக சுந்தர் பிச்சை உள்ளார். அவரைப் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்.
52 வயதான சுந்தர் பிச்சை படித்து, வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான்.
சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை, பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி-யிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் படித்தார்.
கூகுள் டூல்பார், ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட கூகுளின் சேவைகளிலும் சுந்தர் பிச்சையின் பங்கு மிகவும் முக்கியமானது.
கூகுள் குரோம் இல்லாத கணினியையே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு கூகுள் குரோம் பிரவுசர் இணையம் பயன்படுத்துவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இந்த கூகுள் குரோம் உருவாக்கத்திற்கு சுந்தர் பிச்சையின் பங்கு அளப்பறியது.
கூகுள் குரோம்-ன் வெளியீடு சுந்தர் பிச்சையின் கரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றதே என சொல்ல வேண்டும்.
தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருப்பதால் அதன் மீது தனது கவனத்தை செலுத்தியிருக்கிறார்.
ஒரு மணி நேரத்திற்கு 66 ஆயிரத்து 666 ரூபாய் சம்பாதிக்கிறாரம். சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டு தோராயமாக கூகுள் நிறுவனத்தில் இருந்து ரூ.1,854 கோடி ரூபாய் காம்பன்ஷேசனாக வழங்கப்பட்டது.
இதன்படி பார்த்தால் சுந்தர் பிச்சை ஒரு நாளைக்கு ரூ.5 கோடி பெறுகிறார். அதுபோக சுந்தர் பிச்சை 20 போன்களை வைத்திருக்கிறாராம்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பதால் தனது பணிக்காகவே அவருக்கு 20 போன்கள் தேவைப்படுகிறதாம்.
கூகுளின் பல்வேறு விதமான செயலிகளும் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யவே அவருக்கு இத்தனை போன்கள் தேவைப்படுகிறதாம்.
அதே நேரத்தில் சுந்தர் பிச்சை தனது செல்போன்களுக்கு அடிக்கடி பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொண்டு இருக்க மாட்டாராம்.
ஆனால் அதேவேளையில், தனது செல்போன்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரண்டு அடுக்கு பாதுகாப்பு அம்சத்தை ஆக்டிவேட் செய்து வைத்து இருக்கிறாராம்.
தமிழர்களுக்கு பெருமைச் சேர்த்த சுந்தர் பிச்சையின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.