January 13, 2026
தமிழ் மக்களின் ஆதரவை ரணில் பெறவே முடியாது..!
News News Line Top Updates புதிய செய்திகள்

தமிழ் மக்களின் ஆதரவை ரணில் பெறவே முடியாது..!

Apr 20, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷக்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் உள்ள வாக்காளர்களில் 40 வீதமானோர் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை. 60 சதவீத வாக்குகளை வைத்துத்தான் கருத்துக் கணிப்புகள் வருகின்றன. அது உறுதியான முடிவாக அமையாது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள், ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷக்கள் பக்கம் நிற்கும் வரை அவருக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள். எனவே, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள மக்களுள் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி பக்கம்தான் தற்போது நிற்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க எப்படித்தான் முயற்சித்தாலும் ராஜபக்ஷக்களுடன் இருக்கும் வரை அவரின் முயற்சி வெற்றியளிக்காது.

தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு உள்ளது. அம்மக்களின் உரிமைக்காக முன்னின்றவன் நான். எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *