Wednesday, July 29, 2026
No menu items!

ரணில் விக்கிரமசிங்க

அரகலய மக்கள் போராட்டத்தை ஜனநாயக முறையில் கட்டுப்படுத்த முடிந்தது; ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய மக்கள் போராட்டத்தை ஜனநாயக முறையில் கட்டுப்படுத்த முடிந்தது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், போராட்டங்களுக்கு சர்வதேச ஆதரவு இருந்தாலும், அதற்கு பணியாமல் நாட்டின் பிரச்சினைகளை சுயமாக தீர்க்க வேண்டும் எனவும் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “எங்களிடம் இருந்த பிரச்சினைகள் பங்களாதேஷ், நேபாளம் போன்ற...

6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் – ரணில்!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 26 ஆம்...

கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய நபர் கைது!

கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் களுத்துறை நகர சபையின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோட்டை நீதிமன்றம் அருகே...

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கலாகவே தெரிகிறது –எம்.பி ஞா. ஸ்ரீநேசன்!

ரணில் விக்கிரமசிங்கவை விட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், இல்லாவிடின் ரணிலின் கைதினை அரசியல் பழிவாங்கலாகவே நாம் பார்க்கிறோம் என எம்.பி ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாலையடிவட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

ரணிலுக்கு மூன்று வேளையும் வீட்டுஉணவு.!!

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் இருந்து மூன்று வேளை உணவு மற்றும் பானங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் குடும்ப உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை...

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரணில்..!!

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கான மருத்துவ ஆலோசனைகளை கருத்தில் கொண்டு அவரை தேசிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுரவும் அரசாங்க சொத்தை, தனியார் தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளார் – லிஹினி பெர்ணாண்டோ!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமைக்கு பல அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் தங்களது கருத்தை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் லிஹினி பெர்ணாண்டோ தனது பேஸ்புக் கணக்கில் ரணிலை போன்றே ஜனாதிபதி அநுரவும் அரசாங்க சொத்தை, தனியார் தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ”ஒரு நாட்டின் ஜனாதிபதி,...

ரணிலை பார்வையிட சென்ற எதிர்க்கட்சித் தலைவர்!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறை வைத்தியசாலையில் சந்தித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) காலை சிறை வைத்தியசாலையில் அவரைச் சந்தித்து பார்வையிட்டார். விளக்கமறியல் உத்தரவின் பின்னர், ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) இரவு சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ரணிலை பார்வையிடச் சென்றார் மஹிந்த..!!

கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாகத் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க கைதாகியது முதல் பல்வேறு அரசியல்வாதிகளும் அவரைக் காண்பதற்கு சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரணில்..!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு இரண்டு மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மருத்துவ மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய கோரிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img