கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பொங்கலை வரவேற்கும் முகமாக கடந்த சில தினங்களாக திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன.
குறிப்ப்பாக இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைப்பெற்றிருந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம்(08) 1008 பொங்கல் பானைகள் , 1500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் கலாச்சாரப் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
தமிழர் பாரம்பரியத்தை கட்டியெலுப்பும் செயட்பாடுகளை மேற்கொண்டு வருவதால் கிழக்கு மாகண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு சர்வதேச ரீதியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.