சிறையில் உள்ள நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகியின் தண்டனையை மியன்மார் குறைத்துள்ளது என அவரது சட்டத்தரணி வெள்ளிக்கிழமை ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
ஊழல், தேர்தல் மோசடி மற்றும் அரசு இரகசியச் சட்டங்களை மீறியது போன்ற பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவருக்கு 27 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை காலம் குறைக்கப்பட்டமைக்கு அமைய 80 வயதான சூகி,27 ஆண்டுகளுக்குப் பதிலாக, சுமார் 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
மியான்மரின் ஜனாதிபதி மின் ஆங் ஹ்லைங் 4,335 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளித்தார்.
மியான்மர் பொதுவாக ஜனவரி மாதத்தில் சுதந்திர தினத்திற்காகவும், ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டுக்காகவும் கைதிகளை விடுவிக்கிறது. இது 6 மாதங்களில் வழங்கப்படும் 3வது பொது மன்னிப்பாகும்.
ஆங் சான் சூகியை அதிகாரத்திலிருந்து தள்ளி வைப்பதற்காகவே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன என்றும் இவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மின் ஆங் ஹ்லைங் எனும் ஒரு இராணுவ ஜெனரல் 2021 இல் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் நாட்டைக் கைப்பற்றியதோடு சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றினார்.
அவர் ஏப்ரல் 3 அன்று ஜனாதிபதியானார், ஆனால் பல நாடுகள் தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ நடைபெறவில்லை என கூறுகின்றன.








