இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வேட்பாளராக களமிறங்க போவதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(04) சிறிலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களையும் தமது கட்சி வெற்றிகரமாக எதிர்நோக்கும். தமது கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பில், தேர்தல் நெருங்கும் போது அறிவிக்கப்படும்.
தமது ஆட்சி காலத்தின் போது பெறுமதி சேர் வரி வீதம் குறைக்கப்பட்டதன் விளைவாகவே தற்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களாக ராஜபக்ச குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.