இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 தொடரை இந்தியா அணி கைப்பற்றியுள்ளது.
M.சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சுப்பர் ஓவரில் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதற்கமைய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் ரோஹிட் சர்மா 121 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 69 ஓட்டங்களையும் இந்தியா அணி சார்பாக பெற்றனர்.
பந்து வீச்சில் ஃபரீட் அஹமட் 3 விக்கட்டுக்களையும், அஷ்மதுல்லா ஒமர்சை 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமநிலை செய்தது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக குல்பதின் நைப் அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் வாஸிங்டன் சுந்தர் 3 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சுப்பர் ஓவர் நடைபெற்றது.
இதில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கட்டுக்களை இழந்து ஒரு ஓட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணி 2 விக்கட்டுக்களை இழந்து 11 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
இந்த வெற்றுயுடன் இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹிட் சர்மா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தொடரின் நாயகனாக சிவம் துபே தெரிவாகியிருந்தார்.