நகைக் கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை..!
கொழும்பு ஹோமாகம நகரில் உள்ள நகைக் கடைக்குள் மோட்டார் சைக்கிளில் சென்று நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது..
இதன்போது, நகைக் கடையிலிருந்த 36 மோதிரங்களும் 8 பெண்டன்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்களில் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது..
![]()