பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜயகுமார் பழங்காலத்தில் இருந்து தற்போது வரைக்கும் ஒரு சிறப்பான நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இவரின் 2 வது மகள் அனிதா. அனிதா சினிமாவின் பக்கம் தலைகாட்டாமல் வைத்தியராக தற்போது பணியாற்றி வருகிறார்.
இவருக்கு ஒரு மகன், மகள் இருக்கின்றனர். இதில் மகள் தான் தியா என்பவர். தியா தனது நீண்ட நாள் காதலரான தில்லான் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இவர் டாக்டரா அல்லது ஆக்டரா என்று கேட்கும் அளவுக்கு நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும வகையில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.