புத்தளம், நுரைச்சோலை, ஆலங்குடா பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் நண்பர்களுடன் இணைந்து ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் போதைப் பொருளை பயன்படுத்தியதைக் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், ஏழு இளைஞர்களைக் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 1,200 மில்லிகிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் அவர் புத்தளம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவரென தெரிய வந்துள்ளது.
மேலும் , சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.