அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந் நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவர் நாடு திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதென ஊடகங்கள் செய்தி விடுத்துள்ளன.
அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்குமாறு மொட்டு கட்சியிடம் ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.