நாட்டின் 76 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றம் புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்களே இவ்வாறு விடுதலையாகியுள்ளனர்.
அதற்கமைய, மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் எஸ் பிரபாகரன் தலைமையில் இன்று (04) காலை 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் வவுனியா சிறையில் இருந்து 13 சிறைகைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்