நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) மற்றும் குஜராத் ஜயண்ட்ஸ் (Gujarat Giants) அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது.
குஜராத் அணி சார்பாக தயாலன் ஹேமலதா (Dayalan Hemalatha) 31 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் சோஃபி மொலினக்ஸ் (Shophie Molineux) 3 விக்கட்டுக்களையும் ரேனுகா சிங் (Renuka Singh) 2 விக்கட்டுக்களையும் பெங்களூர் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் 12.3 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 110 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.
பெங்களூர் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஸ்மிர்தி மந்தனா (Smriti Mandhana) 43 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
குஜராத் அணிக்கு ஆஷ்லே கார்ட்னர் (Ashleigh Gardner) மற்றும் தனுஜா கன்வர் (Tanuja Kanwar) ஆகியோர் தலா 1 விக்கட்டை பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகியாக பெங்களூர் வீராங்கனை ரேனுகா சிங் (Renuka Singh) தெரிவாகியிருந்தார்.
இன்றைய போட்டியில் பி வோரியர்ஸ் (UP Warriorz) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) ஆகிய அணிகள் மோதவுள்ளன.