பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இயக்கத்தில் உள்ள வழக்கமான சேவைகளுக்கு மேலதிகமாக, குறித்த மேலதிக ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 27) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ​​வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொசொன் அனுசரிப்புகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லவிருக்கும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்குவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here