சீனாவை பூர்வீகமாக கொண்ட பழங்களில் பீச் பழமும் ஒன்று.
இந்த பழங்கள் பெரும்பாலும் கோடைக்காலத்தில் விளையக்கூடியவை. பீச் பழங்களை “ஸ்டோன் பழங்கள்” என்றும் அழைப்பார்கள்.
மேலும், இந்த பழங்கள் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்டரைன் உள்ளிட்ட ஸ்டோன் ஃப்ரூட் பழங்களை சார்ந்தவையாகும்.
2. மலச்சிக்கல், செரிமான கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சினையுள்ளவர்கள் பீச் பழங்கள் சாப்பிடலாம். இது செரிமானத்தை இலகுப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்கிறது.
3. சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும் ஆற்றல் பீச் பழங்களுக்கு இயல்பாகவே உள்ளது.
4. பொட்டாசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் பீச் பழங்களில் உள்ளன. இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. அத்துடன் மன அழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவியாகவும் இருக்கிறது.
5. இரவு படுக்கைக்கு செல்லும் போது பீச் பழங்களை சாப்பிட்டு விட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம். 6. மார்பு சளி, வறட்டு இருமல், தொண்டை புண் போன்ற நாள்பட்ட நோய்களுக்கும் மருந்தாக பீச் பழங்கள் பயன்படுகின்றன.
7. பீச் பழத்தில் இருக்கும் சத்துக்கள் உணவுக்குழாயை சுத்தப்படுத்தி சீராக இயங்க செய்கிறது. இதனால் வாய் துர்நாற்றம் பிரச்சினை முற்றாக நீங்கும். வயிற்றுப் புழுக்களுக்கு என்ன செய்யலாம் என பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். இப்படியான நேரங்களில் பீச் பழங்கள் எமக்கு கைக் கொடுக்கும்.