January 20, 2026
பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் உயர்வு..!
News News Line Top Updates புதிய செய்திகள்

பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் உயர்வு..!

Apr 13, 2024

நாட்டில் பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதுடன்  வானவெடி, விசில் பட்டாசு போன்றவற்றின் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பட்டாசு வெடிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்துக்களை தவிர்த்து கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *