Tamil News Channel

பெண்களுக்கு இந்த அறிகுறிகள் வருகிறதா? அப்போ இந்த ஆபத்தான நோய் உள்ளது..!

நீரிழிவு நோய் மனிதனின் உடலை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடியது. இந்த நோய் ஒருவரின் உடலில் தங்கி விட்டால் அது பெரிதாக அறிகுறிகளை ஏற்படுத்தாது. உலகளாவிய ரீதியில் பெண்கள் அதிகமாக நீரிழிவு நோயால் பாதிக்கபட்டுள்ளனர்.

இந்த நோய் பெண்களுக்கு ஆரம்பகால அறிகுறிகளை காட்டும் ஆனால் இதை பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் இது தவறானது, இதை அலட்சியம் செய்யாமல் ஆரம்பத்தில் கண்டறிந்து மருத்துவ சிகிச்சை கொடுப்பது அவசியம்.

எவ்வளவு விரைவாக சிகிச்சை கொடுக்கிறோமோ அவ்வளவு நமக்கு நல்லது. எனவே பலரும் அறியாத நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்

ஒருவருக்கு வழமையாக இருப்பதை விட அதிகமான தாகம் ஏற்படடுகிறது என்றால் அவர் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த நோய்க்கு பெயர் பாலிடிப்சியா. இது பெண்களுககு வரக்கூடிய ஒரு தனித்துவ நோயாகும். இதனால் அதிக தாகம் உண்டாகும்.

இதன் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது மாதவிடாய் கர்ப்ப காலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். பாலிடிப்சியா ஏற்படுவதற்கான காரணம் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவானது சிறுநீரகங்களில் அதிகமாகின்றது.

இதனால் குளுகோஸ் வடிகட்டும் செயற்பாடு அதிகமாகும். இதனாலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இந்த அறிகுறிகள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருக்கிறது. இதை தவிர  PCOS வந்துவிட்டால் நமது உடலில் இன்சுலின் சுரப்பதை தவிர்த்து அதிக பாதிப்புக்களை தோன்றுவிக்கும்.

இதன் காரணமாக எடை அதிகரிக்கலாம் தீர்க்க முடியாத முகப்பரு வரலாம். பெண்களில் பலருக்கு அடிக்கடி சிறுநீர் பாதை நோய் தொற்று வந்தால் கவனமாக இருப்பது அவசியம். ஆனால் இதை பெண்கள் பலரும் புறக்கணிக்கின்றனர்.

இது நாளடைவில் மாதவிடாய் சுழற்றியை பாதிக்கும். இதனால் சீரற்ற மாதவிடாய் உண்டாகும். இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை ஹார்மோன் ஒழுங்குமுறை மற்றும் இன்சுலின் உணர்திறனை பாதிப்பதால் இது நிகழ்கிறது.

எனவே இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் முதலில் நீங்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts