எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி வீதியில் ஹிங்குரஆர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
எம்பிலிப்பிட்டியவிலிருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்து லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








