நுவரெலியாவில் உள்ள அரச உல்லாச விடுதியில் நேற்று (19.10) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துக்கு பல்வேறு போதைப் பொருட்களை கொண்டு வந்த 31 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
முகநூல் விருந்தில் நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பங்குபற்றவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 08 பொலிஸ் குழுக்கள் நுவரெலியா நகருக்குள் நுழைந்த இளைஞர்கள் கைது செய்யதுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.








