திருகோணமலை ஈச்சலம்பற்று பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரை 12 கிராம் 11 மில்லிகிராம் கஞ்சாவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலையில் கைது செய்துள்ளதாக ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று காலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் பிரதேசத்தில் குறித்த கஞ்சா வியாபரியான பெண்ணின் வீட்டை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.சமந்த தலைமையில் பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன் போது குறித்த பெண்ணை கைது செய்ததுடன் இவரிடமிருந்து 12 கிராம் 11 மில்லிக்கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 42 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post Views: 2