Tamil News Channel

மட்டக்களப்பில் திருடிய மோட்டர் சைக்கிளை 9 மணித்தி யாலயத்தில் வாகரையில் வைத்து திருடனை கைது செய்த பொலிசார்..!

மட்டக்களப்பு நகரில் திருடிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை சுமார் 9 மணித்தியாலயத்தில் வாகரையில் வைத்து திருடனை கைது செய்ததுடன் மோட்டர் சைக்கிளை மீட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.கே.கஜநாயக்கா தெரிவித்துள்ளார்.

நகர்பகுதியில் அரச வங்கி ஒன்றின் கடமையாற்றி வரும் ஒருவர் நேற்று  பிற்பகல் 1.30 மணியளவில் வங்கி வாகன தரிப்பிடத்தில் தனது மோட்டர் சைக்கிளில் அதன் திறப்பு மற்றும் தலைக்கவசத்தை  மோட்டர் சைக்கிளில் விட்டு வங்கிக்குள் சென்றுள்ளார்.

மேலும் இந்த நிலையில் வங்கியில் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என அங்கு சென்ற  ஊறணி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் அங்கு சாவியுடன் நிறுத்தி இருக்கும் மோட்டர் சைக்கிளை கண்டதும் அதனை அங்கிருந்து திருடி செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசாரின் விசாரணையில் திருடன் மோட்டர்சைக்கிளில் வாகரையிலுள்ள அவனது உறவினரிடம் சென்றுள்ளதாக அறிந்து கொண்ட பொலிசார் திருடனை வாகரையில் வைத்து சுமார் 9 மணித்தியாலயத்தில் கைது செய்ததுடன் மோட்டர் சைக்கிளை மீட்டுள்ளனார்.

இதில் கைது செய்யப்பட்ட இளைஞன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இச் செய்தியை எமது பிராந்திய செய்தியாளர் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *