January 13, 2026
மனைவிக்கு சிகிச்சையளிக்க போதிய பணம் இல்லை -விபரீத முடிவு
புதிய செய்திகள்

மனைவிக்கு சிகிச்சையளிக்க போதிய பணம் இல்லை -விபரீத முடிவு

Feb 6, 2024

சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட நாட்களாக படுக்கையில் உள்ள நிலையில் அவரது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கணவனால் அதிக பணம் செலவிட வேண்டியுள்ளதால்  போதிய பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர்கள் 58 வயது மற்றும் 54 வயதுடையவர்களாவர்.

மேலும் விஷம் குடித்து வீட்டில் ஆபத்தான நிலையில் இருந்தவர்களை அயலவர்கள் சிகிச்சைக்காக சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் நீண்ட காலமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் பொருளாதார நிலைமை இல்லாத காரணத்தினால் தம்பதியினர் சில காலமாக கடும் விரக்தியில் இருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர சுசந்தவின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *