மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த டி. என். ஏ. பரிசோதனையை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதான நீதவான் அருண புத்ததாச இன்றையதினம் (28) உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி என்ற பெண் வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி குழந்தையை பிரசவித்திருந்த நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்ததாக காட்டப்பட்ட குழந்தை தங்களுடையது இல்லை பெற்றோர் என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய தமது சிசு தொடர்பில் DNA பரிசோதனை செய்யுமாறு பெற்றோர்கள் கோரிய நிலையில், வைத்தியசாலையின் பணிப்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாத்தறை பிரதான நீதவான் வைத்தியசாலைக்கு சென்று, வைத்தியசாலை அதிகாரிகள் பெற்றோரிடம் காட்டியதாகக் கூறப்படும் சிசுவின் சடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவை வழங்கியுள்ளார்.