இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,905 ஆக அதிகரித்துள்ளதாக அந்த பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜூலை மாதத்தில் நேற்று (24) வரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,530 ஆகும்.
இந்த ஆண்டு இதுவரை, கம்பஹா மாவட்டத்தில் 17,135 நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 16,140 நோயாளர்களும் மாத்தறை மாவட்டத்தில் 5,574 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் பதிவான டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,835 ஆகும்.
அத்துடன் தென் மாகாணத்தில் 12,260 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 6,924 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.








