தற்போது உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் நோய்களில் ஒன்றாக உயர் இரத்த அழுத்தம் பார்க்கப்படுகின்றது.
இந்த பிரச்சினையால் இதயம் மட்டுமல்ல சருமமும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஏனெனின் நம்முடைய ஆரோக்கிய குறைபாடுகளை வெளிக்காட்டும் வேலையை முகம் பார்க்கின்றது.
உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை மனித உடலின் இயக்கவியல் மற்றும் நமது தோலில் இரத்த ஓட்டம் அடைவதற்கு இடையேயான சமநிலையை நிலைகுலைய வைக்கிறது.
இதுவே காலப்போக்கில் சரும பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
உயர் இரத்த அழுத்தம் இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை பாதிப்பதால் சருமம் பாதிக்கப்படுகின்றது. இதற்கான முக்கிய காரணம், சருமத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு செல்கள் இழக்கப்படுகின்றன.
உயர் இரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்களுக்கு சரும மீளுருவாக்கம் செயன்முறை சற்று தாமதமாக இடம்பெறும். இதனால் தான் இந்த பிரச்சினையிருப்பவர்களுக்கு காயம் ஏற்பட்டால் அது சீக்கிரத்தில் ஆறாது.
மேலும் எரித்மா மற்றும் பெட்டீசியா போன்ற கடுமையான சரும பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்கிறது.
இதில் சருமத்தின் மேற்பரப்பிற்கு அருகாமையில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து “எரித்மா” என்கிற நோயை ஏற்படுத்தும், இதன் வெளிப்பாடாக சிவப்பு புள்ளிகள் தோன்றும்.