January 13, 2026
முகத்தை பளபளப்பாக வைத்திருக்க செய்யும் அழகு குறிப்புகள்…!
Top Updates புதிய செய்திகள்

முகத்தை பளபளப்பாக வைத்திருக்க செய்யும் அழகு குறிப்புகள்…!

Apr 30, 2024

விட்டமின் E மாத்திரைகளில் இருக்கும் எண்ணையை எடுத்து தினமும் முகத்தில் தடவி வர முக சுருக்கங்கள் மறைந்து முகம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

கஸ்தூரி மஞ்சள் தேமல், அரிப்பு போன்ற தோல் பிரச்சனைகளையும் நிரந்தரமாக தீர்க்கும்.  தினமும் இதை உடம்பு முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் வீசாமல் நம்மை எப்போதும் நறுமணமாகவும் புத்துணர்ச்சியாகவும்  வைத்திருக்கும்.

குளிக்கும் போது கடலைமாவை எலுமிச்சம் பழச்சாறில் குழைத்து, சோப்புக்குப் பதில் உபயோகிக்கலாம். இதேபோன்று, கோதுமைத் தவிட்டையும் உபயோகிக்கலாம். இதனால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதாக உதிர்ந்து  புத்துணர்வு பெறும்.

நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீராவியில் முகத்தைக் காட்டினால், முகத்தின் நுண்ணிய வியர்வைத் துவாரங்களில்  உள்ள அழுக்குகள் வெளியேறும். பருக்கள் வராது.

சிலருக்கு கழுத்து கருமையாகக் காணப்படும். இதைப் போக்க குளிக்கும் போது கழுத்தில் நன்கு சோப்பு தடவி பீர்க்கங்காய் கூடால் நன்கு தேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம் மாறி இயற்கையான நிறம் வந்துவிடும்.

வேப்பிலையை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும். முக அழகைக் கெடுக்கும் தேமலை அகற்ற எலுமிச்சம் பழச்சாறுடன் துளசி இலைச்சாறை சேர்த்துத் தடவி வரவேண்டும்.

முகத்துக்கு மேக்கப் போடுவதற்கு முன் லேசாக முகம் முழுவதும் பன்னீரைத் தடவினால், சருமம் மென்மையாக இருக்கும்.  நீண்ட நேரம் மேக்கப் கலையாமலும் இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *