Tamil News Channel

முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை – U19

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் இலங்கை அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக டினுர கலுபஹன 60 ஓட்டங்களையும், சாருஜன் சண்முகநாதன் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்து வீச்சில் வில்லியம் எக்ஸ்டீன் 3 விக்கட்டுக்களையும், மெத்தியூ சோன்கென் மற்றும் நியூமன் டகுட்ஸ்வா நியாம்குரி ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் சிம்பாப்வே அணி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே 13.2 ஓவர்களில் 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை மழை காரணமாக நிறுத்தப்பட்ட போட்டி 22 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது.

இதற்கமைய வெற்றியிலக்கு 129 ஆக குறைக்கப்பட்டது.

துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 21.1 ஓவர்களில் 89 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

சிம்பாப்வே அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மெத்தியூ சோன்கென் 27 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

பந்து வீச்சில் மல்சா தருபதி 3 விக்கட்டுக்களையும், ருவிசான் பெரேரா மற்றும் விஸ்வ குமார ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக டினுர கலுபஹன தெரிவாகியிருந்தார்.

இந்த வெற்றியுடன் இலங்கை அணி 2 புள்ளிகளுடன் C குழுவின் புள்ளிப்பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.

தற்போது நடைபெறுவரும் போட்டிகளில் அவுஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளும் பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளும் மோதுகின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts