அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பை கட்சியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்ப்பளித்துள்ளது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வழங்கிய பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.