இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்ரா தீவிலுள்ள மெராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை (03) வெடித்து சிதறிய போது 75 பேர் அப்பகுதியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் 11 மலையேறும் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு, 12 பேரை காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், படாங் தேடல் மற்றும் மீட்பு முகாமைத்துவத்தின் தலைவர் அப்துல் மாலிக் குறித்த பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் இருந்த 26 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எரிமலை தொடர்ந்து வெடித்த வண்ண உள்ளமையினால் இன்று (04) திங்கட்கிழமை மீட்பு பணிகள் இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.