Monday, July 27, 2026
No menu items!

இந்தோனேசியா

இந்தோனேசியாவில் பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோர்ஜோ நகரத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் கட்டடம் இடிந்து விழுந்ததால், பள்ளியில் இருந்த மாணவர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதுடன், மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விபத்து நேரத்தில், பள்ளிக்கட்டடத்தில் ஆண் மாணவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிய வருகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடருகின்ற நிலையில், தற்போது...

கெஹேல்பத்தர பத்மே குழுவிடம் இருந்து அதிர்ச்சித் தகவல்கள் !

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் குழுவினரிடம் இருந்து அதிர்ச்சித்தரும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், மித்தெனிய - கண்டேவத்தை பகுதியில் மூவர் கொலை செய்யப்பட்டமையும், மித்தெனிய - தொரகொலயாய பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் தங்களுக்குத் தெரிந்தே நடத்தப்பட்டதாக அவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இந்த...

இன்று நாட்டிற்கு வரும் இந்தோனேசியாவில் கைதான குற்றவாளிகள்!!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும் இன்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றது. இந்நிலையில், கைது செய்யபட்ட ஐவரையும், இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழு பொறுப்பேற்ற நிலையில், அவர்கள் விமானத்தில் இலங்கை...

இந்தோனேசியா: புளோரஸ் தீவில் லெவோடொபி எரிமலை தீவிர வெடிப்பு – 3 முறை வெடித்த சிகரம்!

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் உள்ள லெவோடொபி லக்கி-லக்கி (Lewotobi Laki-laki) எனும் இரட்டைச் சிகர எரிமலை மீண்டும் தீவிரமாக வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் பெரும் பேரிடர் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரு கட்டத்தில், சாம்பல் மேகம் 18 கி.மீ உயரம் வரை வானத்தில் பறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இதனால் மக்கள்...

இந்தோனேசியாவில் மனிதனை விழுங்கிய மலைப்பாம்பு: 63 வயது விவசாயியின் உடல் கண்டெடுப்பு!

தென்கிழக்கு சுலவேசியின் தெற்கு பூட்டன் மாவட்டத்தில் உள்ள படாகா துணை மாவட்டத்தைச் சேர்ந்த எல்.என் எனும் 63 வயது விவசாயி, 8 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பின் வயிற்றில் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரி சனிக்கிழமை உறுதிப்படுத்தினார். மத்திய இந்தோனேசியா நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு படாகா துணை மாவட்டத்தின் மஜாபஹித் கிராமத்தில் எல்.என்-ன் உடல் குடியிருப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது...

இந்தோனேசியாவின் பாலி தீவில் படகு விபத்து; 4 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்!

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே கடலில் பயணித்த 65 பேரை ஏற்றிய படகு கவிழ்ந்ததில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலரின் நிலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல், ஆரம்பத்தில் சிறிது நேரம் சென்றதன் பின் மூழ்கியதால், பசார்னாஸ் எனும் தேடல் மற்றும் மீட்பு...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுமத்ராவில் 58 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தோனேசியாவில் அடிக்கடி...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட  திடீர் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் இன்று (07) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.39 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. 70 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 1.13 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 97.54 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ஆச்சேவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இன்று (08) அதிகாலை 2.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

மண்சரிவில் சிக்கி 10 பேர் பலி..!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மலைப்பாதையில் பயணித்த பல மகிழுந்துகள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
- Advertisement -spot_img

Latest News

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
- Advertisement -spot_img