இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நரேந்திரமோடி மூன்றாவது முறையாவும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் அவரது பதவியேற்பில் 7 நாடுகளின் தலைவர்கள் பன்கேற்கவுள்ளனர்.
நாளை ஞாயிற்று கிழமை (09) இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி, பங்காதேஷ் பிரதமர், மாலைதீவு ஜனாதிபதி, சிசல்ஸ் துணை ஜனாதிபதி ,மொரீஷியஸ் பிரதமர், நேபாள பிரதமர், பூட்டான் பிரதமர் உள்ளிட்ட 7 அயல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் அயல் நாட்டு தலைவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அளிக்கும் விருந்திலும் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது