Tamil News Channel

யூபி வாரியர்ஸ்சை வீழ்த்திய குஜராத் ஜயண்ட்ஸ் அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் யூபி வாரியர்ஸ் (UPwarriorz) மற்றும் குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) ஆகிய அணிகள் அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants)) அணி 08 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) அணி சார்பாக பெத் மூனி (Beth Mooney) 52 பந்துகளில் 74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பந்து வீச்சில் சோஃபி எக்லெஸ்டோன் (Sophie Ecclestone) 03 விக்கெட்டுக்களையும் தீப்தி சர்மா (Deepti Sharma) 02 விக்கெட்டுக்களையும் சாமரி அதபத்து (Chamari Athapaththu) 01 விக்கெட்டயும் யூபி வாரியர்ஸ் (UPwarriorz) அணி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யூபி வாரியர்ஸ் (UPwarriorz) 20 ஓவர்கள் நிறைவில்  05 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

யூபி வாரியர்ஸ் (UPwarriorz) அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தீப்தி சர்மா (Deepti Sharma) 60 பந்துகளில் 88 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றார்.

பந்துவீச்சில் குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) அணி சார்பில் ஷப்னம் (Shabnam)  03 விக்கெட்டுக்களையும் கேத்ரின் எம்மா பிரைஸ் (Kathryn Emma Bryce) மற்றும் ஆஷ்லே கார்ட்னர் (Ashleigh Gardner) தலா 01 விக்கெட்டு வீதம் பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகியாக குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) அணியின் ஷப்னம் (Shabnam) தெரிவானார்.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers)ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts