ரஷ்யாவின் – மொஸ்கோவில் மர்ம நபர்களால் பயங்கரவாத தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மொஸ்கோவில் உள்ள Crocus City என்ற அரங்கத்தில்இந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும் இந்த தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயங்கரவாதிகள் குறித்த அரங்குக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.