November 18, 2025
ராயல் சேலஞ்சர்ஸ்யை  வீழ்த்திய டெல்லி கெபிடஸ் அணி..!
News News Line Top Updates புதிய செய்திகள்

ராயல் சேலஞ்சர்ஸ்யை  வீழ்த்திய டெல்லி கெபிடஸ் அணி..!

Mar 11, 2024

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ( Royal Challengers) ஆகிய அணிகள்மோதியிருந்தன.

இப்போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) அணி 01 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெபிடஸ் (Delhi capitals)  அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடஸ் (Delhi capitals) அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

டெல்லி கெபிடஸ் (Delhi capitals) அணி சார்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues) 36 பந்துகளில் 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பந்து வீச்சில் ஸ்ரேயங்கா பாட்டீல் (Shreyanka Patil) 04 விக்கெட்டுக்களையும் சோபனா ஆஷா (Sobhana Asha) 01 விக்கெட்டயும் ராயல் சேலஞ்சர்ஸ் ( Royal Challengers) அணி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் ( Royal Challengers))  20 ஓவர்கள் நிறைவில்  சகல விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

ராயல் சேலஞ்சர்ஸ் ( Royal Challengers) சார்பாக துடுப்பாட்டத்தில் ரிச்சா கோஷ் (Richa Ghosh) 29 பந்துகளில் 51 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றார்.

பந்துவீச்சில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) அணி சார்பில் ஆலிஸ் கேப்ஸி (Alice Capsey) அருந்ததி ரெட்டி(Arundhati Reddy) மற்றும் மரிசான் கேப் (Marizanne Kapp) தலா 01 விக்கெட்டு வீதம்  பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகியாக டெல்லி கெபிடஸ் (Delhi capitals) அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவானார்.

இன்றைய போட்டியில் யூபி வாரியர்ஸ் (UPwarriorz) மற்றும் குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *