நாட்டை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தளம்பல் நிலை காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கமே இதற்கு காரணமாகும்.
இன்றைய தினம் நாட்டின் வடக்கு , வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப்பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேலும் , நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.