November 14, 2025
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் இதழ் வெளியீடு!
புதிய செய்திகள்

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் இதழ் வெளியீடு!

Jun 20, 2024

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை பருவ இதழின் 02 ஆவது இதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த அறுவடை பருவ இதழின் வெளியீட்டு நிகழ்வு,  20.06.2024 இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் தின நிகழ்வின்போது இந் நிகழ்வு நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன்   அவர்கள் தலைமையில் நடைபெற்ற “அறுவடை” பருவ இதழ் 02 வெளியியீட்டு நிகழ்வில் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் மற்றும் நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி ந.சுதாகரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுவைக்க வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

“அறுவடை-02 ” பருவ இதழின் மதிப்பீட்டுரையை வடக்கு மாகாண விவசாய அமைச்சின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் க.ஜெயக்குமார் வழங்கினார்.

விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு பயன்தரும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் அறுவடை பருவ இதழ் மின்னிதழ் வடிவிலும் வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறுவடை பருவ இதழின் மின்னிதழை விவசாய அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள QR ஊடாக Scan செய்தே அல்லது  கீழ்வரும் இணைப்பினூடாகவே தரவிறக்கிப் பெற்றுக்கொள்ள முடியும்.

https://drive.google.com/file/d/1mlLcIY-oqgrAMTXGGK4pEIdK05W96PJK/view?usp=drive_link

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *