வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் உள்ள பெட்டிக் கடையில் கசிப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் ஆறு திருமுருகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவரது வேண்டுகோளை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு உமா சந்திரபிரகாஷ் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, அவ்விடயம் தொடர்பில் அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறித்த பெட்டிக்கடை மூடி சீல் வைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
Post Views: 2