உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த தமிழரான தர்சஜினி சிவலிங்கம் நேற்று(17.06) திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனை சொந்த இடமாக கொண்ட தர்ஜினி சிவலிங்கம் 2009 ஆம் ஆண்டு முதல் இவர் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இணைந்து பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் தலைவர் பொறுப்பினையும் 2012ஆம் ஆண்டு வகித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது தென்னாபிரிக்காவில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை சார்பாக விளையாடிய பின் தனது ஒய்வை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.