
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
வாகன இறக்குமதியை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாகன இறக்குமதி தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியை ஆரம்பிக்க முடியுமா? என்றும் நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை போதுமானதா?, இல்லையா? என்பது தொடர்பிலும் குழு வழங்கும் அறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.