December 9, 2025
வாகன விபத்தில் இளைஞன் பலி..!
Top Updates புதிய செய்திகள்

வாகன விபத்தில் இளைஞன் பலி..!

Apr 25, 2024

புத்தளம் –  மதுரங்குளிய பகுதியில் நேற்றையதினம்(24) இடம்பெற்ற வாகன விபத்தில்  இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரங்குளிய – முக்குதொடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான மானென் நெத்மிக என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற வான் ஒன்று பாதையில் நடந்து சென்ற குறித்த இளைஞன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்து.

தற்காலிகமாக விடுதியொன்றில் தங்கியிருந்து நேற்றையதினம் வீட்டிற்கு செல்லும் வழியிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த அவர், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *