December 13, 2025
வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையில் திடீர் மாற்றம்!!!
புதிய செய்திகள்

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையில் திடீர் மாற்றம்!!!

Jun 18, 2024

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையில் குறைக்க முடியுமான போதிலும் அதற்கு வர்த்தக மாஃபியாக்கள் இடையூறாக இருப்பதாக அகில வெதுப்பக உரிமையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமது சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மற்றும் கோதுமை மா, தேங்காய் எண்ணெய், முட்டை உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்கு தேவையானப் பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இது தமது தொழிற்துறையைப் பாரியளவில் பாதித்துள்ளதாலேயே, வெதுப்பக உற்பத்திகளின் விலையினைக் குறைக்க முடியாதுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *