தென் கொரியாவில் நாசு நகரில் உள்ள இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் காலை 11.00 மணியளவில்  பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விபத்தானது தொழிற்சாலை  மின் கசிவினால்  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பணியில் இருந்த 45 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்  540 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் சுமார் 200 பேர் பணிபுரிவதுடம் அதில் அதிகளவிலான இலங்கையர்களும் பணிபுரிவதாகவும்  தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி விடுத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here