தலைமன்னாரில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் உடல் நலப் பாதிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடிய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.