இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, எஸ்.எல்.சி செயற்குழுவுடன் இன்று நடைபெற்ற விசேடக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பதவி விலக முடிவு செய்துள்ளார்.
அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து சில்வா பதவி விலக உள்ளார் என்று முன்னதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட்டின் புதிய இடைக்காலத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2019 பெப்ரவரியில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா, அன்று முதல் பல தேர்தல்களில் வெற்றி பெற்று அப்பதவியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததோடு இலங்கை கிரிக்கட் அணி பல போட்டிகளில் பிரகாசிக்க தவறிய நிலையில் ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதியினால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.







