அதர்வாவின் “இதயம் முரளி” திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
தற்போது ‘இதயம் முரளி’ படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
இதில் நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டோன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
மறைந்த நடிகர் முரளியின் “இதயம்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்திருந்த நிலையில் அவரது மகனான அதர்வா முரளியின் படத்துக்கு இந்த பெயர் சூட்டப்பட்டமை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.








