மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பிரபல இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி மைசூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எஸ். ஜானகி ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த எஸ். ஜானகி, 1957இல் ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார்.

ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 48,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், நான்கு தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தான் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து அவர் 33க்கும் மேற்பட்ட மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.

அவர் தனது 88 வது வயதில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here